Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இ- நாம் மார்க்கெட் கமிட்டிகளில் விர்ச்சுவல் கணக்குகள் மூடல்

இ- நாம் மார்க்கெட் கமிட்டிகளில் விர்ச்சுவல் கணக்குகள் மூடல்

213 கமிட்டிகளிலும் உள்ள விர்ச்சுவல் கணக்குகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் விளைபொருட்களை கொள்முதல் செய்து வந்த 213 மார்க்கெட் கமிட்டிகளில் விர்ச்சுவல் கணக்குகளை உடனடியாக மூட மார்க்கெட் கமிட்டி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 27 ஒழுங்குமுறை விற்பனைக் குழுக்கள் மூலமாக 285 மார்க்கெட் கமிட்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு,
அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கு அந்தந்த கமிட்டிகளிலேயே வியாபாரிகள் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பட்டுவாடா செய்தனர்.


நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நடைமுறைக்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் 2017 முதல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இ-நாம் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் 213 மார்க்கெட் கமிட்டிகளிலும் மின்னணு தேசிய வேளாண் சந்தை எனப்படும் இ-நாம் கமிட்டிகளில் விர்ச்சுவல் அக்கவுன்ட் தொடங்கப்பட்டது.


வியாபாரிகள் தங்கள் கொள்முதல் செய்த பொருளுக்கான தொகையை அந்தந்த மார்க்கெட் கமிட்டிகளில் உள்ள விர்ச்சுவல் அக்கவுன்ட்டில் (மெய்நிகர் கணக்கு) டிஜிட்டல் பேமென்ட் முறையில் செலுத்தினர். மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கிக் கணக்கில் அந்த தொகையை வரவு வைத்து வந்தது. 

இந்த நடைமுறையில் சில இடங்களில் மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பணம் உரிய நேரத்தில் வராததால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, இ- நாம் நடைமுறையில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் இணைய வழியிலேயே வியாபாரிகள் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 213 கமிட்டிகளிலும் உள்ள விர்ச்சுவல் கணக்குகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி
Farm inputs available at subsidised rates in Karur
அடுத்த செய்தி
Vadipatti-Thamaraipatti bypass to spur trade, connectivity

தொடர்புடைய செய்திகள்